search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்ப பக்தர்கள்"

    • ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
    • வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது. 

    "ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.

    ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

    மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.

    • டீக்கடைக்குள் புகுந்த லாரி இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
    • படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போலீஸ் நிலையத்துக்கு எதிரே ஒரு டீக்கடை, பேக்கரி உள்ளது. இந்த வழியாக வாகனங்களீல் செல்வோர், சுற்றுலா பயணிகள், கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் பேக்கரி முன்பாக வேனை நிறுத்தி டீ குடித்து செல்வது வழக்கம்.

    இன்று அதிகாலை இந்த கடை முன்பாக சென்னை, திருவள்ளூரில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு மாலை அணிந்த பக்தர்கள் வந்த வேன், அதே பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வந்த மற்றொரு வேன், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற மற்றொரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வேன்கள், காரில் வந்த 25 பேர் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், சாலையோரம் நின்றிருந்த 2 வேன், கார் மீதும் பயங்கரமாக மோதியது. மேலும் அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் திருவெல்லைவயல் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (வயது 26), ஊத்துக்கோட்டை பனையன்சேரியை சேர்ந்த ஜெகநாதன் (60), வேனில் அமர்ந்திருந்த ஓம் சக்தி கோவில் பக்தரான சீனிவாசன் மனைவி சாந்தி (55), மதுரவாயல் அன்னை இந்திரா நகர் தெரு சுரேஷ் (34), சென்னை அமைந்தகரை சதீஷ் (24) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    • விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகளும் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகனந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • அய்யப்ப சாமி படத்துடன் கூடிய கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அதிகரித்து வருகிறது.
    • திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்த பனியன்களை தயாரித்து வருகிறது என்றனர்.

    திருப்பூர்:

    சபரிமலைக்கு செல்ல அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளதால், அவர்கள் அணியும் வகையில் அய்யப்ப சாமி படத்துடன் கூடிய கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அதிகரித்து வருகிறது.

    அய்யப்ப பக்தர்கள் கருப்பு வேட்டி, கருப்பு சட்டை, துண்டு அணிவது வழக்கம். கருப்பு நிற சட்டைகளை விட டீ-சர்ட் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலத்தில் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனைக்கு அதிக கிராக்கி உள்ளது. அய்யப்ப சாமி படம், புலி வாகனத்தில் அய்யப்ப சாமி அமர்ந்து இருப்பது போன்ற படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தில் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற வாசகமும், அய்யப்ப சாமி படம் அச்சிடப்பட்ட டீ-சர்ட் அதிகம் விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களில் அய்யப்பசாமி படம் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்டுகள் சில்லறை விற்பனைக்காக திருப்பூரில் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் வியாபாரிகள் கூறும்போது, சீசன் பனியன் ஆடைகள் விற்பனை நன்றாக இருக்கும். சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கருப்புநிற டீ-சர்ட் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.100 முதல் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனையாகிறது. இளம்பக்தர்கள் அதிகம் வாங்குகிறார்கள். அய்யப்ப சாமி படம் ஒளிரும் மையால் அச்சிட்டு டீ-சர்ட் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்த பனியன்களை தயாரித்து வருகிறது என்றனர்.

    • சபரிமலை செல்ல மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி செல்கிறார்கள்.
    • அதிகாலை நேரங்க ளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை உள்ளது. இந்த பகுதியில் வேதநாயகி உடனமர் சங்க மேஸ்வரர் கோவிலும் அமை ந்துள்ளது. இந்த கோவிலில் பெருமாள், முருகன் சன்ன திகளும் அமைந்து உள்ளது.

    பவானி கூடுதுறை தமிழக த்தில் உள்ள பரிகார தலங்க ளில் சிறந்த பரிகார தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வர்கள் மட்டுமின்றி தமிழக த்தின் பல பகுதிகளிலும் இரு ந்து ஏராளமான பக்தர்கள் வந்து கூடுதுறையில் புனித நீராடி செல்கிறார்கள்.

    குறி ப்பாக திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன்கேனார்க ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்கிறார்கள்.

    இதனால் கூடுதுறையில் எப்போது மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் பவுர்ணமி, அமா வாசை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தை விட அதிகமாக ஆயிரகண க்கான மக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரர் மற்றும் வேதநா யகி அம்மனை வழிபடுகிறார்கள்.

    ேமலும் ராமேஸ்வ ரத்துக்கு அடுத்தப்படியாக சிறந்த தலமாக கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களின் பல பகுதி களில் இருந்தும் ஏரா ளமான பக்தர்கள் கூடுதுறை க்கு வந்து புனித நீராடி ஈசனை வழிபட்டு செல்கிறார்கள்.

    இதே போல் தமிழகத்துக்கு புனித யாத்திரை வரும் பெரும்பா லான மக்கள் கூடு துறைக்கு வந்து புனித நீராடி விட்டு செல்வது வழக்கமாக கொண்டு உள்ளனர்

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திகை மாதம் பிறந்தது. இதையொட்டி சபரிமலை செல்வதற்காக அய்யப்ப பக்தர்கள் பலர் மாலை அணிவித்து விரதம் தொடங்கி உள்ளனர். இதே போல் ஈரோடு மாவட்ட த்திலும் பக்தர்கள் பலர் மாலை அணிந்து உள்ளனர்.

    பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சபரி மலை செல்ல மாலை அணி ந்திருக்கும் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வ ரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் அய்ய ப்ப பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்ப என சரண கோஷம் முழங்க தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இதனால் கடந்த சில நா ட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பவானி கூடுது றையில் அய்ய ப்ப பக்தர்க ளின் கூட்டமாகவே காண ப்பட்டு வருகி றது. குறிப்பாக அதிகாலை நேரங்க ளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுறது.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த பக்த ர்கள் பலர் கூடு துறைக்கு வந்து புனித நீராடி விட்டு மீண்டும் சபரி மலைக்கு செல்கிறார்கள்.

    இதே போல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர் பகுதிகளில் இருந்து பவானி வழியாக அய்யப்ப கோவி லுக்கு செல்லும் பக்தர்கள் கூடு துறைக்கு வந்து சங்கமேஸ்வ ரரை வழிபட்டு விட்டே செல்கிறா ர்கள்.

    மேலும் சபரிமலை செ ல்லும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு புனித தலங்களுக்கு செல்லும் பலரும் கூடுதுறை க்கு வந்து புனித நீராடி விட்டு செல்கிறார்கள்.

    • 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பகவதி அம்மனை தரிசிக்கும் அவலம்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொ டங்கிய நிலையில் ஏராள மான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். பஸ், கார் மற்றும் வேன்களில் வரும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் சிலுவை நகர் வழியாக காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு காமராஜர் மண்டபம் வழியாக முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    ஆனால் தற்போது சிலுவை நகரில் இருந்து சன்செட் பாயிண்ட் பகு திக்கு அய்யப்ப பக்தர் களின் வாகனங்களை போலீசார் அனுப்புவதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் சென்றடைய முடியும். ஏற்கனவே சபரிமலையில் தரிசனம் செய்து களைப்பில் வரும் அய்யப்ப பக்தர்கள், வயதான, ஊனமுற்ற பக்தர்கள் பலர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.ஏற்கனவே நுழைவு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் கட்டிவிட்டு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடுதலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது. இதற்காக ஒரு நபர் சுமார் ரூ.100 கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.

    இதுவரை காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை என்றால் மட்டும் பயன்படுத்தி வந்த சிலுவை நகர் பார்க்கிங்கில் அனைத்து வாகனங்களையும் அனுப்பும் நடைமுறை அய்யப்ப பக்தர்களை வேண்டும் என்றே அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
    • வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது.

    சேலம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மண்டல பூஜையையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்றும் அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதியான இன்று அதிகாலை முதலே ஏராள மான அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். குறிப்பாக சேலத்தில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் 500-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை யிலேயே குவிந்தனர். அவர்கள் அய்யப்பனைமணமுருக வணங்கி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல சேலம் சுகவனேஸ்வரர் கோவில், ராஜகணபதி கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், அம்மாப்பேட்டை குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில், டவுன் ரெயில் நிலையம் அய்யப்பன் கோவில், ஊத்து மலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன், அய்யப்பன் கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் இரு முடி கட்ட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த கோவில்களில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    இதனால் சேலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சரணம், சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் ஒலித்தது. இதையொட்டி கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய இன்றே நடை பாதை யாகவும், வாகனங்களிலும் ஏராளமா னோர் புறப்பட்டு சென்றனர்.

    இதையொட்டி சேலம் சின்ன கடை வீதியில் கார்த்திகை விரதம் தொடங்கிட தேவையான துளசி மணி மாலை, வேட்டி துண்டுகள், அய்யப்பன் டாலர், இரு முடி பை, சந்தனம், ஜவ்வாது, விபூதி, குங்குமம், இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை , ஏலக்காய், அச்சுவெல்லம், பச்சரிசி ஊதுவத்தி , நெய் உள்பட பூஜை பொருட்கள் வாங்க கடைவீ தியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது. 

    • அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.
    • மணலூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    சுவாமிமலை:

    கார்த்திகை முதல் தேதியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று அய்யப்பசுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று கார்த்தினை முதல் தேதி என்பதால் கும்பகோணம் யானையடி அய்யனார் கோயிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திருவிடைமருதூர் தாலுக்கா மணலூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    மண்டல விரதத்தை தொடங்குவதற்காக குருசாமியின் முன்னிலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    சுவாமிமலையில் அய்யப்ப பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி காவி மற்றும் கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகா பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    • கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
    • ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    கோபி:

    கேரள மாநிலம் சபரி மலையில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விள க்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலை க்கு சென்று ஐயனை தரி சனம் செய்வார்கள்.

    இதை யொட்டி தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ங்களில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் ஐயப்பன் கோவில், கோபி ஐயப்பன் கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமார சாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோ வில் மற்றும் சுற்று வட்டார கோவில்களில் இன்று அதி காலை முதலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று காலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இவர்கள் துளசி மணி அல்லது ருத்ராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் கொண்டதாக வாங்கி அவ ற்றுடன் அய்யப்பன் திருவுரு வப்படத்தை இணைத்து அணிந்து கொண்டனர். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொண்டனர்.

    இதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நல்ல நாளில் மாலை அணிந்து கொள்வார்கள். சன்னிதானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்பாக குறை ந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கு ம்படி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்வர்.

    ஐயப்ப பக்தர்கள் தின மும் இரு வேலைகளில் குளித்து அய்யப்பன் திரு வுருவப்படத்தை வணங்கி தினமும் ஆலய வழிபாடு மற்றும் பஜனைகளில் கலந்து கொண்டு ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    • மதுரை கோவில்களில் சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
    • குருநாதர்கள் மூலம் துளசிமாலை அணிந்து கொண்டனர்.

    மதுரை

    கார்த்திகை மாதத்தில் அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அய்யப்ப னுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் திர ளான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப் பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இதில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கோவில் தலைமை குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள கோவிலுக்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதேபோல் புதூரில் உள்ள அய்யப்பன் கோவி லிலும் திரளான பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். காளவாசல் அய்யப்பன் கோவில், ரெயில்வே காலனியில் உள்ள அய்யப்பன் கோவில், விளாச் சேரியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அழகர்மலை யில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் பழமு திர்ச்சோ லை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்ட னர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், நேதாஜி ரோட்டில் உள்ள தண்ட பாணி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். சிலர் குரு நாதர்கள் மூலம் தங்கள் வீடுகளிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    முன்னதாக நேற்று மதுரையில் உள்ள கடை வீதிகளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காவி, கருப்பு, நீல நிற ஆடைகள், துளசி மாலை வாங்க குவிந்தனர்.

    • பக்தர்கள் கடைகளில் துளசிமணிமாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை நேற்று முதலே வாங்கினர்.
    • இன்று முதல் மார்கழி 11-ந்தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருடந்தோறும் செல்வது வழக்கம். குறிப்பாக மகர ஜோதிக்கு லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் செல்வார்கள். அதன்படி கார்த்திகை மாத பிறப்பான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இ்ன்று காலை திருப்பூரில் உள்ள அய்யப்பன் ேகாவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கடைகளில் துளசிமணி மாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை நேற்று முதலே கடைகளில் வாங்கினர்.

    விரதம் இருக்கும் அய்யப்பபக்தர்கள் அவரவர் வசதிக்கு தகுந்தவாறு ஒரு மண்டலம் (41 நாட்கள்), அரைமண்டலம் (21 நாட்கள்)விரதமும், இன்னும் சிலர் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மகரஜோதி வரைக்கும் 2 மாதமும் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். சபரிமலைக்கு செல்பவர்கள் கோவில்களில் குருசாமியின் மூலம் துளசிமணி மாலைகளை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். இன்று முதல் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் இருவேளை குளித்து அருகாமையில் உள்ள கோவில்களுக்கு சென்று அய்யப்ப சரணகோஷமிட்டு வழிபடுவார்கள்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ேகாவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    வெள்ளகோவில் தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவராக மாலை அணிவித்துக் கொண்டனர். மண்டலகால பூஜையை முன்னிட்டு இன்று முதல் மார்கழி 11-ந்தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது.

    பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன், சபரிமலை செல்வதற்காக விரதம் மேற்கொண்டு கருப்பு மற்றும் புளு கலரில் வேட்டி துண்டுகளை கட்டிக்கொண்டனர். மேலும் துளசி மற்றும் சந்தன மாலைகளை அணிந்து கொண்டனர். இக்கோவிலில் கார்த்திகை 1-ந்தேதியை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.

    • ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
    • சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.

    கன்னியாகுமரி ;

    இந்தியாவின் தென்கோடிமுனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.

    மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

    சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம் விடப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் வசதி செய்யப்பட உள்ளது.

    பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.

    ×